தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் துல்கர் சல்மானும் இணைந்து தயாரித்த’காந்தா’ படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடித்திருந்தார்.
இந்தப் படத்தின் கதை, ஒரு பிரபல இயக்குநருக்கும் (சமுத்திரக்கனி - அய்யா), அவர் அறிமுகப்படுத்திய, உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகருக்கும் (துல்கர் சல்மான் - டி.கே. மகாதேவன்) இடையே நடக்கும் மோதலை மையமாகக் கொண்டது.
அய்யா கலையே முக்கியம் என்று நம்ப, மகாதேவன் ரசிகர்களைக் கவரக்கூடிய ‘ஹீரோயிசமே’ முக்கியம் என்று நம்புகிறார்.
இவர்கள் இருவரும் இணைந்து பாதியில் நின்ற ‘சாந்தா’ என்ற ஒரு படத்தை ‘காந்தா’ என்ற பெயரில் மீண்டும் எடுக்கத் தொடங்கும்போது இவர்களுக்குள் மோதல் வெடிக்கிறது.
இந்த மோதலின் நடுவில் படத்தின் நாயகி குமாரி (பாக்யஸ்ரீ போர்ஸ்) மர்மமான முறையில் இறக்கிறார். இந்தக் கொலையை யார் செய்தார் என்பதை புலனாய்வு அதிகாரி போனிக்ஸ் (ராணா டகுபதி) விசாரிப்பதே படத்தின் மீதிக் கதை.
இப்படத்தில் துல்கரின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் படத்தின் திரைக்கதை சிலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிபலிப்பு வசூலிலும் தெரிந்தது. இருப்பினும், ‘காந்தா’ படம் முதல் நாள் வசூல் உலகளவில் ரூ. 10.5 கோடியைக் கடந்துள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

