விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமான புகழ், கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிகராகவும் வலம் வருகிறார்.
‘அயோத்தி’, ‘சபாபதி’, ‘வாய்மை’, ‘வலிமை’, ‘யானை’ உள்ளிட்ட படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் புகழ். தற்போது ‘மிஸ்டர் ஸூ கீப்பர்’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில் இவர் புதிய படம் ஒன்றில் மீண்டும் கதாநாயகனாக இடம்பெறவுள்ளார்.
ஶ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் பிலிம்ஸ், கேசவ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. அறிமுக இயக்குநரான மகேஸ்வரன் கேசவன் இயக்கும் இப்படத்திற்கு ‘4 சிக்னல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் கதை, நகரங்களில் வசிக்கும் சாதரணமான பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் எளிய போக்குவரத்தான ஷேர் ஆட்டோவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ‘அருவி’ திருநாவுக்கரசு, ‘கல்லூரி’ வினோத், ‘லொள்ளு சபா’ சேஷு, ஷர்மிளா, விஜய் ஆதிராஜ் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
‘4 சிக்னல்’லின் முதல் காட்சி ‘போஸ்டரை’ (ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

