நடிகர் பிரபுதேவாவுடன் தாம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பாடகர் உன்னி கிருஷ்ணன்.
“திரையுலகில் என்னுடைய முதல் பாடல் பிரபுதேவா நடித்த ‘காதலன்’ படத்தில் இடம்பெற்ற ‘என்னவளே அடி என்னவளே’ பாடல். அந்தப் படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன.
“இத்தனை ஆண்டுகளில் பிரபுதேவாவுடன் நான் எடுத்துக்கொண்ட முதல் படம் இதுதான்,” என்று தமது பதிவில் உன்னி கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

