தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘வேட்டையன்’ முதல் பாடல் வெளியீடு

1 mins read
8b991a1f-28ce-448e-ad36-1d14d216e902
‘வேட்டையன்’ படத்தில் ரஜினி. - படம்: ஊடகம்

ரஜினி நடித்து வரும் ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 9ஆம் தேதி (இன்று) வெளியாகிறது.

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

அக்டோபர் 10ஆம் தேதி இப்படம் திரை காணும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ’மனசிலாயோ’ என்ற பாடலை படக்குழு வெளியிடுகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் வெளியாகும் இப்பாடலை, ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ’ஹுகும்’ பாடலை எழுதிய சூப்பர் எழுதியுள்ளார்.

இப்பாடலுக்காக ஆவலுடன் காத்திருப்பதாக ரஜினி ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

அண்மைக் காலமாக தமிழ்த் திரையுலகில் குறைந்த செலவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் உலக அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்