நடிகர் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ திரைப்படம் தென் கொரியாவிலும் வெளியாகிறது.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படம், உலகெங்கும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியாகி உள்ளது. இதில் ரஜினி பேசும் அதிரடி வசனம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இதற்கிடையே, தென் கொரிய நாட்டில் ரஜினியின் படத்தை வெளியிட உள்ளனர். அந்நாட்டில் முதன்முதலாக திரைகாணும் தமிழ்ப் படம் ‘வேட்டையன்’தான்.
ரஜினி படங்களுக்கு ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், ‘வேட்டையன்’ முன்னோட்டக் காட்சித் தொகுப்பு இணையத்தில் வெளியான சில மணி நேரங்களுக்குள் லட்சக்கணக்கானோர் அதனைக் கண்டு ரசித்துள்ளனர்.