முதன்முறையாக ஒரு குத்துப்பாடலுக்கு நடிகை ராஷ்மிகா நடனமாட உள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்மையில், சல்மான் கான் ஜோடியாக இவர் நடித்த இந்திப் படமான ‘சிக்கந்தர்’ வெளியானது. தமிழில் ‘குபேரா’, தெலுங்கில் மூன்று படங்கள் என பரபரப்பாக வலம்வரும் ராஷ்மிகா,
தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ‘டிராகன்’ என்ற படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு நடனமாட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக படக்குழு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
இப்போது தெலுங்குத் திரையுலகில் இது குறித்துத்தான் பரவலாகப் பேசப்படுகிறது.
இதுவரை எந்தப் படத்திலும் ராஷ்மிகா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியதில்லை. அதிக சம்பளம் தருவதாகக் கூறினாலும் அவர் தயங்குவதாகத் தகவல். ஆனால், இந்தப் பாடலுக்கு இந்தியத் திரையுலகில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என பிரசாந்த் நீல் நம்புவதாகவும் ராஷ்மிகாவை அவரது தரப்பு தொடர்ந்து வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.