தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐந்து நாயகிகளுடன் அல்லு அர்ஜுன்

3 mins read
65424dd0-dc21-4fd5-bc69-c6905198d131
தீபிகா படுகோன், மிருணாள் தாகூர், அல்லு அர்ஜுன், ஜான்வி கபூர், பாக்யஸ்ரீ போர்ஸ். - படம்: ஊடகம்

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஐந்து நாயகிகள் நடிக்க இருக்கிறார்கள்.

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் ‘புஷ்பா 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர் ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அட்லி இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் 5 நாயகிகள் நடிக்கிறார்கள். இதில் மூவர் பாலிவுட் நடிகைகள். ஒருவர் வெளிநாட்டு நாயகி. இந்தப் படம் தற்போது ‘AA22xA6’ என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு அறிவியல் கலந்த படமாக உருவாக இருக்கிறது.

‘AA22xA6’ படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிக்கிறார். கதாநாயகனாக அல்லு அர்ஜுன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் வில்லன் வேடத்திலும் அல்லு அர்ஜுன் நடிக்கிறாராம்‌. இது தவிர ஒரு அனிமேஷன் கதாபாத்திரமும் இருக்கிறதாம். இந்த மூன்று மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தன்னை தயாராக்கிக் கொண்டிருக்கிறார் அல்லு அர்ஜுன்.

இந்தப் படத்திற்காக அட்லி அனைத்துலக ‘விஎஃப்எக்ஸ்’ நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். அல்லு அர்ஜுன் தனது கதாபாத்திரத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார். அவர் தனது உடற்தகுதி, நடை, உடை தோற்றத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஏற்கெனவே இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், தீபிகா படுகோன், மிருணாள் தாகூர் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். தற்போது ‘கிங்டம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார் என்று அறிவித்து உள்ளனர்.

இதுதவிர ஹாலிவுட்டில் இருந்து ஒரு நடிகையையும் அட்லி இறக்க உள்ளாராம். இவ்வாறு அதிர்‌‌ஷ்டக்கார அல்லு அர்ஜுனுக்கு ஐந்து கதாநாயகிகளை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

அல்லு அர்ஜுனின் ‘AA22xA6’ படம் 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. இது ‘டைம் டிராவலை’ அடிப்படையாகக் கொண்ட அறிவியல் படம். ஹாலிவுட் படங்களைப் போல, இதன் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும் என்று கூறுகிறார் அட்லீ.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026ல் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். நடிக்க நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மட்டும் ரூ.300 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதால் வேலைகள் படு தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு (Waves) மாநாட்டில் அல்லு அர்ஜுன் அவரது படங்கள் குறித்துப் பேசும்போது, “நான் நடித்த படங்களில் 18 படங்கள் தோல்வியைத் தழுவின.

“அதனால் ஆறு அல்லது ஏழு மாதங்கள் ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் படங்களில் நடிக்கலாம் என்று நினைத்தேன்.

“ஆனால், அந்த ஓய்வுக் காலம் ஓராண்டு ஆகிவிட்டது. அந்தச் சமயங்களில் நான் நிறைய சிந்தித்தேன்.

“உண்மையில் அந்த ஓராண்டு ஓய்வு என் மிகச்சிறந்த ஓய்வுகளில் ஒன்றாக இருந்தது. அந்த ஓய்வுக்குப் பிறகு ‘அலா வைகுந்தபுரமுலு’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

“தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக அந்தத் திரைப்படம் இடம்பெற்றது.

“அதன் பிறகுதான் ‘புஷ்பா’, ‘புஷ்பா 2’ பட வாய்ப்பு வந்தது. அந்த ஓராண்டு ஓய்வுதான் என்னை சுயபரிசோதனை செய்துகொள்ள உதவியாக இருந்தது,” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரைப்படம்