தமிழில் உருவாகும் ‘Vowels-An Atlas Of Life’ என்ற படத்தில் ஐந்து நாயகிகள் நடிக்க உள்ளனர்.
சம்யுக்தா விஸ்வநாதன், விஜயஸ்ரீ, காஜல் சௌத்ரி, சித்து குமரேசன், விஜ்யேதா வசிஷ்ட் ஆகிய ஐந்து நாயகிகளுக்கும் உரிய முக்கியத்துவத்துடன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இவர்களுடன் யூகிசேது, சின்னி ஜெயந்த், நந்து உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர்.
சரவண சுப்பிரமணியம் இசையமைக்கும் இந்தப் படத்தில், மொத்தம் ஐந்து கதைகளைச் சொல்லப்போகிறார்கள். இவற்றை திலீப் குமார், ஹேமந்த் குமார், சங்கீத்நாத், சந்தோஷ் ரவி, ஜகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து பேர் இயக்க உள்ளனர்.
“ஒவ்வொரு கதையும் தனித்துவமான உணர்வுகளைப் பேசும். ஆசை, அர்ப்பணிப்பு, இழப்பு, நெருக்கம், மாற்றம் என அனைத்து உணர்வுகளும் இணைந்து காதலை அழகான மொழியாகச் சித்தரிக்கிறது. காதலின் இரு பக்கங்களைப் பேசும் திரைப்படமாக இதை உருவாக்கி உள்ளோம்.
“படத்தைப் பார்த்த பின்னர் உயிர், உணர்வு, பாசத்திலிருந்து பிறப்பதுதான் காதல் என்பதை அனைவரும் புரிந்துகொள்வர்,” என்கிறார் தயாரிப்பாளர் ராஜு ஷரேகர்.

