அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க உள்ள படத்தில் மொத்தம் ஐந்து நாயகிகள் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. முதன்மை நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க, மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உட்பட மேலும் இருவர் ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல்.
அது மட்டுமல்ல, இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக அவரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். எனினும், அவரது தரப்பிலிருந்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
“இந்தப் படம் சாதாரண படைப்பாக இருந்துவிடக் கூடாது. இதற்கு முன்பு இந்தியத் திரையுலகிலிருந்து இவ்வளவு பிரம்மாண்டமாக ஒரு படம் வெளியாகவில்லை என்றும் இனிமேல் இப்படிப்பட்ட படைப்பு உருவாக வாய்ப்பில்லை என்றும் உலகமே மெச்சும் படைப்பாக இருக்க வேண்டும்,” எனத் தன் உதவி இயக்குநர்களிடம் கூறியுள்ளார் அட்லீ.