அஜித்தைச் சந்தித்த நான்கு இயக்குநர்கள்

1 mins read
d2cd335f-8f65-4dc0-a0db-0ffbde852442
(இடமிருந்து) விஷ்ணு வர்தன், சிறுத்தை சிவா, அஜித், ஆதிக் ரவிச்சந்திரன், ஏ.எல்.விஜய், சுரேஷ் சந்திரா. - படம்: சுரேஷ் சந்திரா

நடிகர் அஜித்குமாருடன் இயக்குநர்கள் ஆதிக் ரவிச்சந்திரன், விஷ்ணு வர்தன் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

அஜித்குமார் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி கார் பந்தயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். இதில் அஜித்தின் அணி சில விருதுகளையும் பெற்று வருகிறது.

இந்நிலையில், அஜித்தின் கார் பந்தயப் பயணம் குறித்து இயக்குநர் ஏ.எல்.விஜய் ஆவணப்படம் எடுத்து வருகிறார். இந்த ஆவணப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருப்பதைப் படக்குழு உறுதி செய்துள்ளது.

ஆவணப்படம் மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், சிறுத்தை சிவாவும் அஜித்தை வைத்து ஒரு விளம்பரப் படம் எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‛பில்லா’, ‘ஆரம்பம்’ படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். அஜித்துடன் ‛வீரம்’, ‘விவேகம்’, ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களைச் சிறுத்தை சிவா இயக்கினார்.

‛குட் பேட் அக்லி’ படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். அஜித் நடிப்பில் வெளியான ‛கிரீடம்’ படத்தை இயக்கியவர் ஏ.எல்.விஜய்.

அஜித்துடன் இயக்குநர்கள் உள்ள புகைப்படத்தை அவரின் உதவியாளர் சுரேஷ் சந்திரா இணையப் பக்கத்தில் வெளியிட்டார்.

குறிப்புச் சொற்கள்
அஜித்சமூக ஊடகம்திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்