மறுவெளியீடு காணும் ‘ப்ரண்ட்ஸ்’

1 mins read
53fd2ce6-8264-45c6-b6bf-05db4aca9517
விஜய், சூர்யா நடித்த ப்ரண்ட்ஸ் திரைப்படச் சுவரொட்டி. - படம்: ஊடகம்

2001ஆம் ஆண்டு விஜய், சூர்யா நடிப்பில் வெளியான ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் மின்னணு முறையில் 4கே தொழில்நுட்பத்தில் நவம்பர் 21ஆம் தேதி மறுவெளியீடாகிறது.

இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற அப்படத்தில் இடம்பெற்ற நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் பெரிதாக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

மேலும், அப்படத்தில் வடிவேலு நடித்த நேசமணி கதாபாத்திரத்தை முன்வைத்தே அண்மையில், ‘#PrayForNesamani’ என்ற ஹேஷ்டேக் பிரபலமானது. அந்தளவுக்கு அந்தக் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

ஆகையால், தற்போது மறுவெளியீடு காணும் ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படமும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது அப்படக்குழு.

விஜய்யின் வெற்றிப் படங்கள் தற்போது மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. ‘கில்லி’, ‘சச்சின்’ உள்ளிட்ட படங்களின் வரிசையில் ‘ப்ரண்ட்ஸ்’ படமும் இணைந்திருக்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்