‘காந்தி டாக்ஸ்’ என்ற பெயரில் உருவாகியுள்ள படத்துக்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர். ரகுமான்.
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி வரும் ஜனவரி 30ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது.
சில மாதங்களுக்கு முன்பே வெளியான இப்படத்தின் சுவரொட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கிஷார் பெல்லேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் வசனங்களே கிடையாதாம். விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஆகிய மூவரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதற்கு முன்பு மூவரும் மணிரத்னம் இயக்கிய ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்திருந்தனர்.

