‘கங்குவா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அப்படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா தெரிவித்துள்ளார்.
‘பாகுபலி’ படத்தின் முதல் பாகத்தின் முடிவில், இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு திருப்பம் உண்டாகும்.
அதேபோல் ‘கங்குவா’ படத்தின் இறுதியிலும் முக்கியமான திருப்பம் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்க வேண்டுமென முன்பே தீர்மானித்துவிட்டேன்.
“இது நிறைய கதாபாத்திரங்கள் உள்ள கதை என்பதால் இணையத்தொடராகவும் இதை எடுக்க முடியும். நான் எதற்கும் தயாராக உள்ளேன்,” என்கிறார் இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா.

