கலங்கி நிற்கும் நண்பரைப் பாட்டுப்பாடி தேற்றிய கங்கை அமரன்

1 mins read
3af06d31-3b88-4b36-a65d-7dba8af64deb
பாரதிராஜா, கங்கை அமரன். - படம்: ஊடகம்

மகன் மனோஜ் பாரதியின் மறைவால் பெருந்துயரத்தில் மூழ்கி உள்ளார் பாரதிராஜா. அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் ஆறுதல் கூறி தேற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் மகனை இழந்துவாடும் பாரதிராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது தொடர்பான காணொளி வெளியாகி, பார்ப்பவர்களைக் கண்கலங்க வைக்கிறது.

அக்காணொளியில் இருவருக்கும் இடையேயான பழைய நினைவுகளைச் சோகமான வார்த்தைகளில் பாரதிராஜாவுடன் பகிர்ந்துகொள்கிறார் கங்கை அமரன்.

மேலும், பாரதிராஜா இயக்கிய படங்களில் தான் பாடிய பாடல்களையும் பாடியுள்ளார். இதை அமைதியாகக் கேட்டபடி பாரதிராஜா அமர்ந்திருப்பது காணொளியில் பதிவாகி உள்ளது.

இதைப் பலரும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

மனோஜ் பாரதி (48) கடந்த 25ஆம் தேதி சென்னையில் மாரடைப்பால் காலமானார்.

குறிப்புச் சொற்கள்