காலஞ்சென்ற கவிஞர் வாலியின் பெயரில் வழங்கப்படும் விருது, இந்த ஆண்டு இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு வழங்கப்படுகிறது.
கடந்த 2013ஆம் ஆண்டு தனது 81வது வயதில் காலமானார் வாலி. தமிழ்த் திரையில் 15,000 பாடல்களை இயற்றி சாதனை படைத்தவர்.
இந்நிலையில், வாலி பதிப்பகம் சார்பாக அவரது 94வது பிறந்தநாள் சென்னையில் நவம்பர் 1ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
ஆண்டுதோறும் இந்த விழாவில் ‘வாலி விருது’ பெறுபவருக்கு ரூ.50,000 பொற்கிழியுடன் வழங்கப்படும். இந்த ஆண்டு விருது பெறும் கங்கை அமரன் குறித்து இயக்குநர் பாக்யராஜ் பேசுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுமை செல்வன் எழுதிய ‘வாலியின் திரைப்பாட்டு முழக்கங்கள்’ என்ற நூலை இயக்குநர் லிங்குசாமி வெளியிடுவார்.

