ரவி மோகனை அடுத்து (ஜெயம் ரவி), நடிகர் கௌதம் கார்த்திக்கும் தன் பெயரை சற்றே மாற்றி அமைத்துள்ளார். இனி அவரைக் கௌதம் ராம் கார்த்திக் என்றுதான் குறிப்பிட வேண்டுமாம்.
ஆர்யாவும் கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் சுவரொட்டி தற்போது வெளியாகி உள்ளது. அதில் கௌதம் ராம் கார்த்திக் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது.
ஆர்யா, சரத்குமார், மஞ்சு வாரியார், கௌதம் கார்த்திக் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.