அரசியல் படத்தில் கௌதம் கார்த்திக்

அரசியல் படத்தில் கௌதம் கார்த்திக்

3 mins read
aaef130f-1612-49d8-9c50-106ec4c7ccc4
‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. - படம்: கௌதம் கார்த்திக் / இன்ஸ்டகிராம்
multi-img1 of 2

‘கடல்’ திரைப்படம் வெளியாகி ஏறக்குறைய 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் மாறாத இளமையுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தன்னைப் பலவிதமாகத் தயார்படுத்திக்கொண்டே இருக்கிறார் கௌதம் ராம் கார்த்திக்.

தற்போது ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ என்ற முழுநீள அரசியல் படத்தில் நாயகனாக நடிக்கிறார் கௌதம். இயக்குநர் தீனா ராகவன் இயக்கும் படம் இது. அவர் அரசியல் கதையை மிக எதார்த்தமாக, நகைச்சுவையாக இயக்கியுள்ளார் என்று பாராட்டுகிறார் கௌதம்.

ஓர் அரசியல் கட்சியின் வட்டச்செயலாளராக இருப்பவர், மாநகராட்சி மன்ற உறுப்பினராக உயர எவ்வளவு போராடுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. கதையைக் கேட்கும்போதே இதில் தாம் நடித்தே ஆகவேண்டுமென முடிவு செய்து விட்டாராம் கௌதம் ராம்.

கதைப்படி, அவருக்கு அரசியல் கற்றுக்கொடுக்கும் குருவாக செல்வராகவன் நடித்துள்ளார்‌. மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் கவிஞர் ஜெயபாலனும் நாயகியாக அர்ச்சனா நேத்ரனும் நடித்துள்ளனர்.

படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் வசனங்களைக் கடந்த ஆண்டு இறுதியிலேயே படமாக்கிவிட்டனராம். ஆனால், அந்த வசனங்கள் இன்றைய அரசியல் சூழலுக்குப் பொருத்தமாக அமைந்துவிட்டதாகக் கூறுகின்றனர் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படக்குழுவினர்.

“இன்று அனைவரும் அரசியலைக் கவனமாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இந்த அரசியல் புரிதல், தமிழகத்துக்கு எது நல்லது, எது கெட்டது என்கிற பார்வையைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால், இனிவரும் நாள்களில் மேலும் பல நல்ல விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது,” என்கிறார் கௌதம் ராம்.

“இங்கே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாற்றம் நடந்து கொண்டேதான் இருக்கிறது. எதிர்காலத்திலும் அது நடக்கும். இப்போது முதல்வர் விஜய் மூலம் அந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை அவர் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் எதிர்காலத்தில் இளையர்கள் இதைக் கையில் எடுத்திருப்பார்கள். இப்போது, விஜய் அதைத் தொட்டதால் அரசியலின் ஒரு முக்கியமான அங்கமாக இருக்கிறார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“கதாநாயகனாக மட்டுமன்றி, பிற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிப்பது குறித்து பலரும் என்னைக் கேட்கிறார்கள்.

“எனக்கு அவ்வாறு மற்ற நடிகர்களுடன் இணைந்து வேலை பார்ப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அவர்களிடம் ஏதாவது ஒரு விஷயம் கற்றுக்கொள்ளலாம்.

“அதுபோன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதன் கதையும் அதில் எனது கதாபாத்திரங்களையும் பார்ப்பேன். என்னை அந்தப் பாத்திரத்துக்குள் பொருத்திக்கொள்ள முடிந்தால் எந்த யோசனையும் இல்லாமல் எளிதில் ஒப்புக்கொள்வேன்.

“சிறு வயதில் எனது பெற்றோர் எனக்கு வைத்த பெயர் கௌதம் ராம் கார்த்திக். ஆனால், முதல் படத்தில் நடிக்கும்போது ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்தார் என் பெயரைச் சுருக்கமாக வைத்துக்கொள்ளலாமா எனக் கேட்டனர். கௌதம் கார்த்திக் என்ற பெயரை நானும் ஒப்புக்கொண்டேன்.

கடந்து மூன்று ஆண்டுகளுக்குமுன் தஞ்சையில் உள்ள எங்கள் குலதெய்வக் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அப்போது, என் தாத்தா பெயரையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என என் மனத்தில் தோன்றியது. எனது தாத்தா முத்துராம் பெயரிலிருந்து ராம் என்பதை மீண்டும் இணைத்துக்கொண்டேன்.

“என் தந்தை கார்த்திக்குடன் இணைந்து நடிக்க எனக்கும் ஆசையாக உள்ளது. நல்ல கதை வந்தால் நிச்சயம் அது நடக்கும்.

“நகைச்சுவை, அதிரடி, குடும்ப உணர்வுகள் என எந்தப் பின்னணியாக இருந்தாலும் எங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் பட்சத்தில் இணைந்து நடிப்போம்,” என்கிறார் கௌதம் ராம்.

குறிப்புச் சொற்கள்