கவின் நடித்துள்ள ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிச்சைக்காரராக நடித்துள்ள கவினின் தோற்றம் கவனம் ஈர்க்கிறது.
சிக்னலில் யாசகம் கேட்பவராக தரையில் அமர்ந்து ஆட்டோக்காரரிடம் காசு கேட்கிறார் கவின். அவர் சவாரி இல்லை என்று சொல்ல “எனக்கு மட்டும் கால் இருந்திருந்தால் உன்னை மாதிரி நானும் ஆட்டோ ஓட்டியிருப்பேன்,” என அப்பாவி முகத்துடன் கூறி நகர்கிறார்.
அப்போது, இசை வாத்தியங்கள் முழங்க சாவு ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறது. உடனே எழுந்து நின்று குத்தாட்டம் போட்டுவிட்டு நடந்து செல்கிறார் கவின்.
இதைப் பார்க்கும் ஆட்டோ ஓட்டுனர் கோபமடைகிறார். இந்தப் படத்துக்கு மிகப் பெரிய அடையாளம் கவினின் வேடம்தான்.