‘பிளடி பெக்கர்’ படத்தின் வசூல் நிலவரம் குறித்து அதிகாரபூர்வத் தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றாலும் இந்தப் படத்தில் கவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.
எனினும் அவரது திரைப்பயணம் எந்த வகையிலும் சுணங்கியதாகத் தெரியவில்லை. ‘கிஸ்’, ‘மாஸ்க்’ என அடுத்தடுத்து புதுப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் நயன்தாராவுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவும் இவரை ஒப்பந்தம் செயதுள்ளனர்.
‘கிஸ்’ படத்துக்காக கவின் இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார். தற்போது இவரது சம்பளம் ஐந்து கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘கிஸ்’ படத்தில் நடிக்கத்தொடங்கிய கவினின் ஊதியம் திடீரென ஏறுமுகமானது. அதிக ஊதியம் கிடைத்த படங்களில் அவர் நடிக்கச் சென்றுவிட்டதாகவும் இதனால் ‘கிஸ்’ படத்தை அவர் புறக்கணிப்பதாகவும் புகார் எழுந்தது. கவின் அதிக சம்பளம் கேட்டபோது அப்படத் தயாரிப்பாளர் மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ‘பிளடி பெக்கர்’, தோல்விப் படம் என முத்திரை குத்தப்பட்டுவிட்டது. இதனால் வேறு வழியின்றி ‘கிஸ்’ படத்தின் தயாரிப்பாளரிடம் சமரசமாகிவிட்டாராம் கவின்.
‘பழைய ஊதியம் தந்தால் போதும், உங்கள் படத்தில் நடிக்கிறேன்’ என அவர் கூறியதாகவும் அதை தயாரிப்புத்தரப்பு ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்.
‘கிஸ்’ படத்தை பிரபல நடன இயக்குநர் சதீஷ் இயக்குகிறார். இவர் ‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்காக சிறந்த நடன இயக்குநர் விருது பெற்றவர்.
‘அயோத்தி’ படத்தில் நடித்த பிரதி அஸ்வானி நாயகியாக நடிக்கும் ‘கிஸ்’ படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

