‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான மலையாள நடிகை லிஜோமோல், ‘பிக்பாஸ்’ புகழ் லாஸ்லியா ஆகியோர் இணைந்து நடித்த படத்துக்கு ‘அன்னபூரணி’ எனத் தலைப்பு வைக்கத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், அந்தச் சமயத்தில் நயன்தாரா நடித்த ஒரு படம் அதே பெயரில் வெளியானது. எனவே லிஜோமோல், லாஸ்லியா நடித்த படத்துக்கு ‘ஜென்டில் உமன்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன், 19 நாள்களிலேயே மொத்தப் படத்தையும் முடித்துவிட்டாராம்.
இரண்டு சராசரிப் பெண்களின் கதையாக உருவாகியுள்ளது ‘ஜென்டில் உமன்’.


