‘புஷ்பா-2’ படம் வெளியான இரண்டு நாள்களில் ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூல் கண்டுள்ளதாக வெளியான தகவல் அப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவை உற்சாகத்தில் உலா வர வைத்திருக்கிறது.
சூட்டோடு சூடாக அவர் நாயகியாக நடித்துள்ள ‘தி கேர்ள் ஃபிரெண்ட்’ படத்தையும் வெளியிட உள்ளனர். இது நாயகியை மையப்படுத்தி உருவாகி உள்ள படமாம். ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார்.
“காதலுக்கும் இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திரம் இளையர்களை நிச்சயம் கவரும். இப்படத்தில் அவரது கண்களும் நடித்திருக்கும்,” என்கிறார் இயக்குநர் ராகுல் ரவீந்திரன்.
இந்தப் படத்தை தெலுங்கு, தமிழ் என ஐந்து மொழிகளில் வெளியிட உள்ளனர்.

