பல உண்மை சம்பவங்களை கோர்வையாக்கி “ஜெய் பீம்” என்ற திரைப்படத்தை எடுத்து மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கினார் இயக்குநர் ஞானவேல்.
தற்பொழுது மீண்டும் சர்ச்சையான ஒரு கதையை கையில் எடுத்திருக்கிறார். வேட்டையன் திரைப்படம் முடிந்த பிறகு, பான் இந்தியா திரைப்படம் ஒன்றை இயக்க அவர் திட்டமிட்டு வருகிறார். ‘தோசை கிங் : மசாலா & மர்டர்ஸ்’ என்கின்ற தலைப்பில், பிரபல சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக இயக்குநர் ஞானவேல் எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சர்ச்சைகள் நிறைந்த இந்தக் கதைகளை அவர் எவ்வாறு கையாளப் போகிறார் என்கின்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

