‘தி கோட்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

1 mins read
292e11aa-6c93-4d47-b479-4f18b4e693ea
நடிகர் விஜய்யின் 68வது படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ - படம்: சமூக ஊடகம்

நடிகர் விஜய்யின் 68வது படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’  என்று அழைக்கப்படும் ‘தி கோட்’. 

வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். செப்டம்பர் 5ஆம் தேதி படம் வெளியாகிறது. படத்தின் முன்னோட்டக் காட்சி சில நாள்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், படத்திற்கு  யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

மேலும் படத்தின் நீளம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடும் திரைப்படமாக வெளியாகிறதாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்