சிறந்த நடிப்பு என்பது எடைக் குறைப்போ அதிகரிப்போ மட்டுமன்று: நித்யா மேனன்

1 mins read
653fd6ac-64b3-4759-b77d-e78cd71d7550
நடிகை நித்யா மேனன். - படம்: ஊடகம்

‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷின் பெண் தோழியாக நடித்திருந்த நித்யா மேனனுக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி தேசிய விருது கிடைத்தது.

இதற்காக அவருக்கு ஒருபுறம் வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், மறுபுறம் ஒருசிலர் ‘இது வழக்கமான கதாபாத்திரம்தானே? சாதாரணமாக நடித்ததெற்கெல்லாம் விருது வழங்குவதா?’ என சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள நித்யா மேனன், “திருச்சிற்றம்பலம்’ படத்தில் எனது நடிப்பை பார்க்கும்போது சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால், அதன் பின்புறமுள்ள உழைப்பைப் புரிந்துகொண்ட தேர்வுக்குழுவுக்கு நன்றி. சிறந்த நடிப்பு என்பது எடைக்குறைப்போ அல்லது அதிகரிப்போ அல்லது செயற்கையாக தோற்றத்தை மாற்றிக் கொள்வதோ அல்ல. அதெல்லாம் நடிப்பின் ஒரு பகுதிதான். அதுவே முழுமை கிடையாது.

இதற்காக எவ்வளவு உழைத்திருக்கிறேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும்.

இந்த விருது எனக்கு, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், தனுஷ் ஆகிய நால்வருக்குமானது. ஏனென்றால் எந்தப் படத்திலும் நடிகருக்கு இணையான வேடத்தில் நான் இதுவரை நடித்ததில்லை,” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 70வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகராக ரிஷப் ஷெட்டி (காந்தாரா), சிறந்த நடிகையாக நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருக்காதா’ பாடலுக்குச் சிறந்த நடன இயக்கத்திற்கான விருதும் வழங்கப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்