தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீயாய் வேலை செய்கிறேன்: ஜி.வி.பிரகாஷ்

1 mins read
c06fdf17-8c64-40fa-bdba-7af92766f83e
அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு இசை அமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ். - படம்: ஊடகம்

அஜித் நடித்திருக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு இசை அமைக்கும் ஜி.வி.பிரகாஷ், படத்திற்காக தீயாய் வேலை செய்வதாகச் சமூக ஊடகத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

‘விடாமுயற்சி’ படத்திற்குப் பிறகு அஜித்குமார் நடித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது. பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பட வெளியீட்டிற்கு இன்னும் 50 நாள்களே உள்ள நிலையில், பாடல் வெளியீடு, முன்னோட்டக் காட்சி ஆகியவை இம்மாத இறுதியில் இருந்து அடுத்தடுத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘எக்ஸ்’ தளத்தில் அஜித் ரசிகர் ஒருவர், “சகோதரா, எங்களின் கடைசி நம்பிக்கை ‘குட் பேட் அக்லி’ மட்டும் தான். அந்தப் படத்தின் இசையில் நெருப்பை சேர்த்து விடுங்க. திரையரங்கம் சிதறட்டும்,” என ஜி.வி.பிரகாஷுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ், “தீயா வேலை செய்துகொண்டு இருக்கிறேன். நீங்கள் எதிர்பார்ப்பதைவிட நெருப்பாக விரைவில் திரையரங்கில் பார்ப்பீர்கள்,’’ என பதிவிட்டுள்ளார்.

இவரது இந்தப் பதிவைப் பார்த்த அஜித் ரசிகர்கள் பெருமகிழ்ச்சியடைந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்