அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் குறு முன்னோட்டக் காட்சித்தொகுப்புக்கு பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.
‘விடாமுயற்சி’ படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
எனவே, ‘குட் பேட் அக்லி’ படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், இப்படத்தின் ‘டீசர்’ காணொளியில் அஜித் சம்பந்தப்பட்ட அதிரடிக் காட்சிகளும் ‘பஞ்ச்’ வசனங்களும் இடம்பெற்றுள்ளன. இவையும் அஜித்தின் தோற்றமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
குறிப்பாக, ‘நாம் குட்-ஆக இருந்தாலும், உலகம் பேட் ஆக்குது’ என்ற வசனத்தை உச்சரிக்காத அஜித் ரசிகர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு இது பிரபலமாகும் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்.
மேலும், ‘ஏகே ஒரு ரெட் டிராகன்... அவன் மூச்சிலேயே முடித்துவிடுவான்’, ‘வாழ்க்கையில் என்னவெல்லாம் பண்ணக்கூடாதோ சில சமயம் அதையெல்லாம் பண்ணனும் பேபி’ உள்ளிட்ட வசனங்களும் ரசிகர்களைக் கவரும் என்கிறார் இப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.