பிரபல பழம்பெரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறார்.
கவுண்டமணி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது; ‘ஒத்த ஓட்டு முத்தையா’வின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
அந்த காலம், இந்த காலம் சங்கமிப்பதுபோல் கவுண்டமணியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார் யோகி பாபு.
80களிலிருந்து 90களின் நடுப்பகுதி வரை தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை மன்னராகத் திகழ்ந்த கவுண்டமணி, கடந்த 15 ஆண்டுகளில் நான்கு படங்களில் மட்டுமே நடித்திருந்தார். அந்த காலத்தில் பல படங்களில் செந்திலுடன் இணைந்து நகைச்சுவையில் கலக்கினார் 85 வயது கவுண்டமணி.