கவுண்டமணி நடிக்கும் ‘பழனிசாமி வாத்தியார்’

கடந்த சில ஆண்டுகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய படங்களில் மட்டுமே நடித்துள்ள கவுண்டமணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாயகனாக நடிக்கவுள்ளார். படத்துக்கு ‘பழனிசாமி வாத்தியார்’ எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

செல்வ அன்பரசன் இயக்கும் இந்தப் படத்தை கவுண்டமணியின் நெருங்கிய நண்பரான மதுரை செல்வம் தயாரிக்கிறார். செல்வ அன்பரசன் இதற்கு முன்பு ‘பேய காணோம்’  படத்தை இயக்கி உள்ளார்.

ஒருமுறை தன் நண்பரிடம் ‘பேய காணோம்’ கதையை விவரித்துக்கொண்டிருந்தாராம் செல்வ அன்பரசன். அப்போது அருகில் இருந்து அதைக் கேட்ட மதுரை செல்வம் பல முறை வாய்விட்டுச் சிரித்திருக்கிறார். அதுதான் தனக்கான புதிய வாய்ப்பை பெற்றுத் தந்ததாகச் சொல்கிறார் செல்வ அன்பரசன்.
கவுண்டமணியின் நட்பு வட்டம் மிகச் சிறியது. அதில் மதுரை செல்வமும் இடம்பெற்றுள்ளார்.

“முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கவுண்டமணியின் நண்பராக உள்ளேன். எந்தவித பிரதிபலன்களையும் எதிர்பார்க்காமல் நட்பு பாராட்டி வருகிறோம். ஊடக நேர்காணல் ஒன்றில் தன்னுடைய மிக நெருங்கிய நண்பர் என்று என் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

“அண்மையில் என் மனைவி காலமானதையடுத்து மனம் உடைந்து போயிருந்தேன். எனக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. அதனால் எனக்காக இந்தப் படத்தில் நடிக்கிறார். அதன் பிறகுதான் செல்வ அன்பரசனை அனுப்பி அவரிடம் கதை சொல்லுமாறு கேட்டுக்கொண்டேன்,” என்கிறார் மதுரை செல்வம்.

கவுண்டமணியுடனான அந்தச் சந்திப்புக்கு நடுக்கத்துடன்தான் சென்றாராம் செல்வ அன்பரசன். ஆனால் அவரோ மிக இயல்பாக பேசினாராம்.

“படத்தின் தொடக்கக் காட்சியை விவரிக்குமாறு சொன்னார். அதன்பிறகு ஒன்றரை மணி நேரம் நான் விளக்கிய கதையைப் பொறுமையுடன் கேட்டார். பிறகு அன்றிரவே தயாரிப்பாளரை கைப்பேசியில் தொடர்புகொண்டு, ‘நல்ல கதை. நாம் இணைந்து பணியாற்றுகிறோம்’ என்று சம்மதம் தெரிவித்தார்,” என்கிறார் செல்வ அன்பரசன்.

‘பழனிசாமி வாத்தியார்’ படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கதைப்படி கவுண்டமணியின் முன்னாள் மாணவர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் அல்லது சந்தானம் நடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல். இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருவருமே கவுண்டமணியின் தீவிர ரசிகர்கள் என்பதால் யாராவது ஒருவர் நடிக்கக்கூடும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!