மருத்துவராக நடிக்கும் கௌரி கிஷன்

1 mins read
b259faa7-2237-44c9-bf55-7235a8b4b618
‘அதர்ஸ்’ படச் சுவரொட்டி. - படம்: ஊடகம்

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் ஆதித்யா மாதவன் நடிக்கும் படம் ‘அதர்ஸ்’. நாயகியாக கௌரி கிஷன் ஒப்பந்தமாகி உள்ளார்.

கடமை உணர்வுமிக்க காவல்துறை அதிகாரியான நாயகனும் மருத்துவரான நாயகியும், மருத்துவத் துறையில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளை அம்பலப்படுத்துவதுதான் கதையாம்.

இதுபோன்ற குற்றங்களை பின்னணியாகக் கொண்டு பல படங்கள் வெளிவந்திருந்தாலும், ‘அதர்ஸ்’ நிச்சயம் அவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசமான படைப்பாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.

இப்படத்தின் சுவரொட்டியில், ஒரு சிசுவின் படம் இடம்பெற்றுள்ளது. எனவே, இது குழந்தைகள், பிரசவம், குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்ட கதையுடன் உருவாகும் படமாக இருக்கக்கூடும் என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் விவாதித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்