தமிழகத்தில் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் 8% கேளிக்கை வரி வசூலிக்கின்றன.
இந்நிலையில், இவ்வரியை 4 விழுக்காடாக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு திரைத்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பழைய தமிழ் திரைப்படங்களுக்கும் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் 7% வரி, 3.5%ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் இதற்காக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தமிழக திரைப்பட உரிமையாளர் சங்க நிர்வாகி ஸ்ரீதர் கூறியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் வெளியிட்ட அறிக்கையில், அண்மைக் காலமாக தமிழ்த் திரைத்துறை எதிர்கொண்டுள்ள கடினமான சூழலில் இந்த அறிவிப்பு தயாரிப்பாளர்களின் பெரும் சுமையைக் குறைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
“தொழில்நுட்ப வளர்ச்சியால் கைப்பேசி மூலம், திரைப்படங்களைக் காண ரசிகர்கள் பழகி வருகிறார்கள். அவர்களை மீண்டும் திரையரங்குக்கு அழைத்து வரும் நல்ல வழியாக அரசின் அறிவிப்பு அமைந்துள்ளது,” என்றும் நாசர் தெரிவித்துள்ளார்.