கோலாகலமாக நடந்தேறிய ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திருமணம்

கோலாகலமாக நடந்தேறிய ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திருமணம்

1 mins read
606b76b1-6936-48af-ab86-79b9e1a3814d
திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். - படம்: நியூஸ்18

சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நட்சத்திர காதல் ஜோடி விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமணம் உதய்பூரில் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) சிறப்பாக நடந்தேறியது. அதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

இருவரும் நீண்ட நாள்களாக காதலித்து வந்தனர். இவர்களது திருமண நிகழ்வில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை காலை 10.10 மணியளவில் நடைபெற்ற திருமணத்தை அடுத்து, தனது உயிர்த்தோழியை மணந்துள்ளதாகக் கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.

மார்ச் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. இதில் இந்தியத் திரையுலகைச் சேர்ந்த பலர் திரளாகக் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

“நான் எங்கே இருந்தாலும் ஒருவித அமைதியையும் வீட்டில் இருக்கும் உணர்வையும் பெறுவதற்கு என் தோழி ராஷ்மிகா எனக்குத் தேவைப்பட்டார். அதனால் என் உயிர்த்தோழியை என் மனைவியாக்கிக் கொண்டேன்,” என்று சமூக ஊடகப் பக்கத்தில் கவித்துவமாகப் பதிவிட்டுள்ளார் விஜய் தேவரகொண்டா.

குறிப்புச் சொற்கள்