தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘குபேரா’ திரைப்படம் வித்தியாசமான ஒன்று

1 mins read
4f229ab6-2b44-4293-90ac-85abd3e800a6
‘குபேரா’ படத்தில் தனுஷ். - படம்: சமூக ஊடகம்

தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ படத்தின் கதைக்களம் என்னவென்று தெரியவந்துள்ளது.

“பணத்தைப் பின்தொடர்வதும் அதன் விளைவுகளையும் சுற்றியே கதை நடக்கிறது. ஒரு பிச்சைக்காரர் ஒரு வியத்தகு மாற்றத்தை சந்திக்கிறார். கதாபாத்திரங்களால் எதிர்கொள்ளப்படும் பேராசை, லட்சியம் மற்றும் தார்மிக சங்கடங்கள் ஆகியவற்றில் இருந்து மீண்டு வருவது ” என்பதையே படத்தின் கதைக்களம் விவரிக்கிறது என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.

சேகர் கமுல்லா இயக்கும் ‘குபேரா’ படத்தின் முன்னோட்டக் காட்சியும் புகைப்படமும் அண்மையில் வெளியானது. அது பலரையும் கவர்ந்தது.

இந்நிலையில், தனு‌ஷ் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ‘இட்லி கடை’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இதில் ‘இட்லி கடை’ படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் மட்டுமே தனு‌ஷ் நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்