திருவாசகத்தை இசைத் தொகுப்பாக உருவாக்குவதே தமது நீண்ட நாள் கனவு என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் குமார் குரல், இசையில் உருவாகியுள்ள திருவாசகம் இசைத்தொகுப்பின் முதல் பாடல் அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது.
இந்தப் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தனது யூடியூப் வலையொளியில் வெளியிட்டுள்ளார் ஜிவி.
அண்மையில் பொங்கல் தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் இந்தப் பாடலை இசை நிகழ்ச்சியாக ஜிவி பிரகாஷ் வழங்கியபோது, பிரதமர் மோடி வெகுவாக ரசித்தார்.
“முதல் பாடலுக்குக் கிடைத்துள்ள வரவேற்பு, எனது கனவு சரியான பாதையில் செல்லத் தொடங்கியிருப்பதை உறுதிப்படுத்துகிறது,” என்கிறார் ஜிவி பிரகாஷ்.
“சிவபெருமானின் பல வடிவங்கள் மனித மனத்தின் தவிப்பையும் இறைவனிடம் நம்மை சரணடைய வைக்கும். இதில் சந்தேகம் இல்லை,” என்று விமர்சகர்கள் பலரும் ஜிவி பிரகாஷ் குமாருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

