‘விஜய்-69’ இயக்கும் ஹெச்.வினோத்: வெளியானது அறிவிப்பு

‘விஜய்-69’ இயக்கும் ஹெச்.வினோத்: வெளியானது அறிவிப்பு

படம்: ஊடகம்

15 Sep 2024 - 3:53 pm

1 mins read

விஜய்யின் 69வது படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குவதுறுதியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு சனிக்கிழமை வெளியானது.

அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், தனது கடைசி படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த கே.வி.என் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இதையடுத்து, படத்தின் அறிவிப்புச் சுவரொட்டியை வெளியிட உள்ளனர். அதில், விஜய் தன் கையில் வெற்றிக்கான தீபத்தை ஏந்துவதுபோல் சித்திரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘ஜனநாயகத்துகான ஒளி விளக்கு’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது அரசியல் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

இது குறித்து, தமிழ் ஊடகங்களில் பலர் விமர்சித்து வரும் நிலையில், விஜய்யின் புதுப்படத்துக்கு அனிருத் இசையமைப்பது உறுதியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தப்படம் வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
விஜய்புதுப்படம்அறிவிப்பு