முடிவுக்கு வந்த ஹன்சிகாவின் திருமண வாழ்க்கை

முடிவுக்கு வந்த ஹன்சிகாவின் திருமண வாழ்க்கை

1 of 2
கோப்புப்படம்: ஸீ நியூஸ்
கோப்புப்படம்: இந்தியா டுடே

13 Mar 2026 - 4:26 pm

1 mins read

நடிகை ஹன்சிகாவின் நான்கு ஆண்டுகாலத் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

அவர் தனது காதல் கணவர் சோஹைல் கதுரியாவைச் சட்டப்படி பிரிந்தார்.

இருவருக்கும் மும்பை நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.

தமிழ்த் திரையுலகத்தில் குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக உருவெடுத்து, ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்தவர் ஹன்சிகா.

புகழின் உச்சியில் இருந்தபோது இவருக்கும் தொழிலதிபர் சோஹைல் கதுரியாவுக்கும் திருமணம் நடந்தது.

அதன் பின்னர் திரையுலகை விட்டு ஒதுங்கிய ஹன்சிகா, தாம் முழுமையான இல்லத்தரசியாக மாறிவிட்டதாகப் பேட்டியளித்திருந்தார்.

இந்நிலையில், கணவர் குடும்பத்தாருக்கும் ஹன்சிகாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதை அடுத்து, கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்தார்.

இந்நிலையில், ஹன்சிகாவும் சோஹைலும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினர். இருவரது மனுவையும் ஏற்று மும்பை நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.

சினிமாவில் நடிப்பதைக் கைவிட்டபோதும், தனது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் ஏதும் ஹன்சிகா கோரவில்லை.

குறிப்புச் சொற்கள்
நடிகைதிருமணம்விவாகரத்து