“திருமணம், குழந்தைகள் பெற்றுக்கொள்வது மட்டுமே பெண்ணின் முழுமைக்கு அர்த்தம் என்று இந்த சமூகம் கட்டமைத்து இருப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை,” என்கிறார் சமந்தா.
தனிமையிலும் மகிழ்ச்சி சாத்தியம் என்று அண்மைய பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
“பெண்கள் திருமணமாகி குழந்தைகள் பெற்றுக்கொண்டால்தான் முழுமையானதாக சமூகத்தில் பார்க்கிறார்கள். இதனால் நான் சோகமான, தனிமையான வாழ்க்கையை வாழ்வதாக எல்லோரும் நினைக்கிறார்கள். அது தவறு,” என்று சமந்தா கூறியுள்ளார்.