தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடனத்தைத் தாண்டி மகிழ்ச்சி: பிரபுதேவா

1 mins read
858e4e31-0c61-443a-b839-9c8239c9d2b9
பிரபுதேவாவுடன் அவருடைய மகன் ரிஷி ராகவேந்திரா தேவா. - படம்: இந்திய ஊடகம்

பிரபல நடனக் கலைஞரும் நடிகருமான பிரபுதேவா தலைமையில் சென்னையில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இம்மாதம் 22ஆம் தேதி நேரடி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், தனது மகனைப் பிரபுதேவா அறிமுகப்படுத்தினார்.

இந்த நடன நிகழ்வில், ‘ரவுடி பேபி’ பாடலுக்கு நடிகர் தனுசும் பிரபு தேவாவும் இணைந்து நடனமாடினர். அடுத்து, பிரபு தேவா ‘பேட்ட ராப்’ பாடலுக்கு நடனமாடியபோது, யாரும் எதிர்பாராத விதமாக பிரபுதேவா மகனும் இணைந்து நடனமாடினார்.

பின்னர், மேடைக்கு அருகே அமர்ந்திருந்த வடிவேலுவிடம் அவர் செய்த நகைச்சுவையான செயல் ரசிகர்களைக் கவர்ந்தது. 

தனது மகனுடன் இணைந்து நடனமாடிய காணொளியை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரபு தேவா, “என் மகன் ரிஷி ராகவேந்திரா தேவாவை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன். இது நடனத்தைவிட பெரிதானது. அதாவது மரபு, ஆர்வம், பயணம் ஆகியவை இப்போது தொடங்குகிறது,” எனக் குறிப்பிட்டார்.

இதனால், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும் இணையவாசிகள் பலரும் பிரபு தேவாவுக்கும் அவருடைய மகனுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, நடன நிகழ்ச்சியில் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நடனத்தின் தொடர்ச்சி எனப் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்