சினிமாவும் இசையும் உணர்வுபூர்வமானவை: இளையராஜா நெகிழ்ச்சி

சினிமாவும் இசையும் உணர்வுபூர்வமானவை: இளையராஜா நெகிழ்ச்சி

1 mins read
ead2d591-6c63-4638-8eac-609cd6affe8a
கார்த்திக் சுப்புராஜின் 10வது படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். இது இளையராஜாவின் 1,540வது படம். - படம்: இந்து தமிழ் திசை

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தம் 10வது படத்தை எடுத்து முடித்துள்ளார்.

அதை, சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் குனீத் மோங்கா கபூர், அசின் ஜெயின் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இது அவருடைய 1,540வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

“சினிமாவும் இசையும் எனக்கு உணர்வுபூர்வமானவை. ஒரு கதையின் நேர்மையும், அதை சொல்லும் மனிதர்களின் உண்மையும்தான் முக்கியம். கார்த்திக் சுப்புராஜுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. சினிமா மீதான அவரது ஆர்வம் அவருடைய பணிகளில் தெரிகிறது,” என்று இளையராஜா கூறியுள்ளார்.

“ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனி உணர்வும் இசையும் உண்டு. இந்தப் படத்திற்குப் பின்னணி இசை அமைக்கும்போது, அந்த இசையைத் தனி தொகுப்பாகவே வெளியிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த அளவுக்குச் சிறப்பாக உருவாகி உள்ளது,” என்கிறார் இளையராஜா.

குறிப்புச் சொற்கள்