இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதுப்படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’, ‘டீசல்’ என வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வருகிறார் ஹரீஷ். இவரது படங்களுக்கு அனைத்துத் தரப்பு ரசிகர்களும் வரவேற்பு அளிக்கின்றனர்.
இந்நிலையில் ‘கதகளி’ போன்று அடிதடி சண்டைக்காட்சிகள் கொண்ட படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் பாண்டிராஜ். அவர் வைத்துள்ள கதைக்கு ஹரீஷ் கல்யாண்தான் பொருத்தமாக இருப்பார் எனக் கருதியதால் உடனடியாக அவருடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளார்.
கதையைக் கேட்டதுமே ஹரீஷுக்குப் பிடித்துப் போனதாம். எனினும் உடனடியாக கால்ஷீட் கொடுக்க முடியாத நெருக்கடியில் உள்ளார் ஹரீஷ். ஆனால் பாண்;dராஜ் அடுத்த பட வேலைகளை விரைவில் தொடங்க வேண்டியுள்ளது.
இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘தலைவன் தலைவி’ படம் வெற்றி பெற்றதை அடுத்து இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
இப்படத்தைப் பிரபல லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால் பட வேலைகளை உடனடியாகத் தொடங்க முடியவில்லை. எனவே நான்கைந்து மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை.
அதனால் இந்தக் குறுகிய காலகட்டத்தைப் பயன்படுத்தி வேறொரு படத்தை இயக்குவதே பாண்டிராஜின் திட்டம்.
ஹரீஷின் பதிலுக்காக பாண்டிராஜும் அவரது குழுவினரும் தயார் நிலையில் உள்ளதாகத் தகவல்.

