தனது குழந்தைகளை இந்தியாவில் வளர்க்கப் பயமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.
காரணம், இந்திய சினிமாவிலும் இந்தியாவிலும் வன்முறை அதிகமாகிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
“இந்தியாவுக்கு அகிம்சை வழியில்தான் சுதந்திரம் கிடைத்தது. வன்முறை எதற்கும் உதவவில்லை. பிறகு ஏன் இந்தியத் திரைப்படங்கள் அதிக வன்முறை கூடாரங்களாகிவிட்டன?” என்று ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார் ராதிகா ஆப்தே.
ஓடிடி தளங்கள் திரைப்படங்களைவிட ஒரு படி மேலே சென்று வன்முறைகளில் உள்ள பல்வேறு வகைகளைக் காட்டி வருவதாகவும் ஒரு பேட்டியில் அவர் புலம்பியுள்ளார்.
பார்வையாளர்கள் விரும்புகிறார்கள் என்பதையெல்லாம் ஒரு காரணமாக முன்வைக்கலாமா என்றும் ராதிகா கூறியதற்கு சமூக ஊடகங்களில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“நீங்கள் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பது மட்டும் சமூகத்துக்கு எந்த வகையில் நன்மை செய்துள்ளது,” என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

