தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கார்த்தியுடன் குழந்தையாக நடித்தவர் அவருக்கே நாயகியானார்

1 mins read
e031e364-0cbd-4e70-8c84-a5c5b9fd4365
‘வா வாத்தியார்’ படத்தில் கீர்த்தி ‌ஷெட்டியுடன் கார்த்தி. - படம்: ஊடகம்

கார்த்தி நடித்த ஒரு படத்தில் குழந்தை வேடத்தில் நடித்த கீர்த்தி ‌ஷெட்டியுடன் தற்பொழுது கார்த்தி ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்களுடன் நாயகியாக நடிப்பது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்தும் மீனாவுடன் நடித்திருக்கிறார். இப்போது, நடிகர் கார்த்தியும் அவரைப்போல தன்னுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவருடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

2010ஆம் ஆண்டு வெளியான ‘நான் மகான் அல்ல’ படத்தில் நடிகர் கார்த்தி ஒரு குழந்தைக்கு கைகாட்டிச் சென்றிருப்பார். ஆனால், அந்தக் குழந்தை சில காட்சிகளுக்கு மட்டும்தான் வரும். அந்த குழந்தை வேறு யாருமல்ல, கீர்த்தி ஷெட்டிதான்.

நளன் குமாரசாமி இயக்கி வரும் ‘வா வாத்தியார்’ படத்தில் கார்த்தியின் ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். இவருக்கு தற்போது 21 வயதாகிறது.

கீர்த்தி ஷெட்டி, கார்த்தி மட்டுமல்லாது பல முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து வருகிறார். ‘வா வாத்தியார்’ படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

கீர்த்தி ஷெட்டி இப்போது தமிழில் பிரதீப் ரங்கநாதனுடன் சேர்ந்து, விக்னேஷ் சிவனின் ‘லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ படத்தில் நடித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்