தன்னை இனிமேல் ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் என்றும் ரவி அல்லது ரவி மோகன் என்று அழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் ஜெயம் ரவி.
அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இந்தப் பெயர் மாற்றம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் திரைத்துறையிலும், தான் கொண்டுள்ள கனவுகளை முன்னோக்கி எடுத்துச்செல்லும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“என் கனவு, மதிப்புகளுடன் புதிய பயணத்தைத் தொடங்கும் என்னை, இந்தப் பெயரிலேயே அனைவரும் அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
“திரைத்துறை மீது நான் கொண்டுள்ள அளவற்ற அன்பு காரணமாக ரவி மோகன் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன்.
“எனக்கு ஆதரவு அளித்த சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய, என் ரசிகர் மன்றமும் `ரவி மோகன் ரசிகர்கள் அறக்கட்டளை’ என மாற்றப்படுகிறது.
“புதிய துவக்கத்துக்கு அனைவரும் ஆதரவு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்,” என ஜெயம் ரவி மேலும் தெரிவித்துள்ளார்.

