இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தற்போது நடித்துவரும் படம் ‘டூரிட்ஸ்ட் பேமிலி’. அப்படத்தில் அவருக்கு மனைவியாக சிம்ரன் நடிக்கிறார். புதுமுக இயக்குநர் அபிஷன் ஜீவந்த் இயக்குகிறார்.
அப்படத்தில் இரு மகன்களுக்குத் தந்தையாக நடிக்கிறார் சசிகுமார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளியல் வீழ்ச்சியைச் சமாளிக்க முடியாத குடும்பம் ஒன்று, அந்நாட்டைவிட்டு சென்னையில் குடியேறி அங்கிருக்கும் மக்களுக்கு மிகவும் பிடித்தவர்களாக எப்படி மாறுகின்றனர் என்பதே அப்படத்தின் கதை என அண்மையில் நடந்த நேர்காணல் ஒன்றில் அவர் கூறினார்.
மேலும், இயக்குநர் அப்படத்தின் கதையை என்னிடம் கூறும்போதே இரு மகன்களுக்குத் தந்தையாக நடிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும் என அவர் சொன்னார்.
“தமிழ்த் திரையுலகில் தந்தையாக நடிக்க விரும்பும் கதாநாயகர்கள் மிகவும் குறைவு. தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் திருமண வயதில் பிள்ளைகள் இருந்தாலும் தந்தையாக சில நாயகர்கள் நடிக்க விரும்புவதில்லை,” என வேதனையுடன் தெரிவித்தார் சசிகுமார்.