சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ‘காந்தா’ பட நாயகி

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ‘காந்தா’ பட நாயகி

படம்: தின மலர்

15 Feb 2026 - 3:16 pm

1 mins read

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கும் புதிய கிராமத்துத் திரைப்படத்தில், நாயகியாக பாக்யஸ்ரீ போர்சே நடிக்க இருக்கிறார். ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார்.

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘காந்தா’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக கவனம் ஈர்த்த பாக்யஸ்ரீ போர்சே, சிவகார்த்திகேயன் படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கவுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு, சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ஒரே கட்டமாக எடுத்து முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்