சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ‘காந்தா’ பட நாயகி

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ‘காந்தா’ பட நாயகி

1 mins read
1af3cd34-0f3d-4e51-845b-c35abe7c607b
சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்தில் ‘காந்தா’ படத்தில் நடித்த பாக்யஸ்ரீ போஸ் நடிக்க இருக்கிறார். - படம்: தின மலர்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கும் புதிய கிராமத்துத் திரைப்படத்தில், நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் நடிக்க இருக்கிறார். ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார்.

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘காந்தா’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக கவனம் ஈர்த்த பாக்யஸ்ரீ போஸ், சிவகார்த்திகேயன் படம் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு, சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ஒரே கட்டமாக எடுத்து முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்