பொங்கல் போட்டியில் கதாநாயகிகள்

2 mins read
f48f4f9d-b2bb-45d6-8f84-c269dbd02e36
ஸ்ரீலீலா. - படம்: டெக்கான் குரோனிக்கல்
multi-img1 of 6

இந்த ஆண்டு பொங்கலையொட்டி தென்னிந்திய சினிமாவில் சில முக்கியமான படங்கள் வெளியாகின்றன.

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களாக உள்ள தமிழ் நடிகர்களின் படங்களைத் தவிர பிரபாஸ், சிரஞ்சீவி, ரவிதேஜா, சர்வானந்த் ஆகியோரின் படங்களும் வெளியாக உள்ளன. இவற்றில் சில படங்கள் தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் வெளியாகின்றன என்பது கூடுதல் தகவல்.

கதாநாயகர்களைப் போலவே கதாநாயகிகளும் தாங்கள் நடித்த சில படங்களின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு என இரு நாயகிகள் நடித்துள்ளனர். இருவரும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள்.

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் ஸ்ரீலீலா. பிரபாஸ் நடித்துள்ள ‘ராஜா சாப்’ படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் என மூன்று நாயகிகள் உள்ளனர்.

சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. ரவி தேஜா, நவீன் பொலிஷெட்டி, சர்வானந்த் ஆகியோர் நடித்த படங்களும் வெளியீடு காண உள்ளன.

இந்தப் படங்களில் ஆஷிகா ரங்கநாத், டிம்பிள் ஹயாத்தி, மீனாட்சி சௌத்ரி, சம்யுக்தா மேனன் ஆகியோரை கதாநாயகிகளாகப் பார்க்க முடியும்.

கதாநாயகர்களுக்கு இடையே எப்போதும் ஒரு போட்டி இருக்கத்தான் செய்யும். இம்முறை கதாநாயகிகள் களமிறக்கப்பட்டிருப்பதும் பொங்கல் சுவாரசியத்தை அதிகப்படுத்தி உள்ளது.

பண்டிகைக் காலத்தையொட்டி வெளியாகும் படங்கள் பெரும் வெற்றியைப் பெறும்போது ரசிகர்கள் நீண்டகாலம் அதை மனத்தில் வைத்துக் கொண்டாடுவார்கள். தவிர நாயகிகளின் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் இந்த வெற்றி தீர்மானிக்கும்.

பூஜா ஹெக்டேவுக்குத் தமிழில் இன்னும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்தாலும், வசூல் ரீதியில் அப்படங்கள் தோல்வி அடைந்ததால் சோகத்தில் உள்ளாராம்.

எனவே, பெரிய நடிகராக இருந்தாலும், இனி நல்ல கதையம்சம் உள்ள படங்களாகத் தேர்வு செய்து நடிக்க அவர் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

எனவே, கதாநாயகிகளுக்கும் இந்தப் பொங்கல் பண்டிகை முக்கியமானதாக மாறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்