நடிகர் விஷால் அன்புச் செழியனிடம் பெற்ற ரூ21 கோடியே 29 லட்சத்தை லைக்கா நிறுவனம் செலுத்தியது.
அதற்கு பதிலாக கடன் தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைக்கா நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஒப்பந்தப்படி நடக்காமல் விஷால் தனது ‘வீரமே வாகை சூடும்’ படத்தை வெளியிட்டார். இதனால் விஷாலுக்கு எதிராக லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2021ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்தது. இருதரப்பு விவாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி லைக்காவிற்கு விஷால் செலுத்த வேண்டிய ரூ.21.29 கோடி தொகையை 30 விழுக்காடு வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
படங்கள் ஏதும் இல்லாமலும் உடல் நலம் குன்றிய விஷாலுக்கு இந்த தீர்ப்பு பேரதிர்ச்சியாக இருப்பதாக கூறுகிறது கோலிவுட்.