தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திப்பட வாய்ப்புகள்: அல்லு அர்ஜுனை அணுகிய தயாரிப்பாளர்

1 mins read
d891a727-9208-4d34-97e6-4f59f8de59b3
‘புஷ்பா-2’ படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா. - படம்: ஊடகம்

‘புஷ்பா-2’ படத்தின் வெற்றியை அடுத்து, இந்தித் திரையுலகிலும் நடிகர் அல்லு அர்ஜுன் குறித்து பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இந்தியாவின் வட மாநில ரசிகர்களிடமும் இந்தப் படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, பிரபல இந்தி தயாரிப்பாளர் கரண் ஜோகர் நேரடி இந்திப் படத்தில் நடிக்கக் கோரி அல்லு அர்ஜுனை அணுகியுள்ளாராம்.

இதற்காக மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் வந்து அல்லு அர்ஜுனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம்.

அப்போது, அவர் எவ்வளவு ஊதியம் கேட்டாலும் தருவதாகக் கூறியுள்ளார். இனி முடிவு செய்ய வேண்டியது அல்லு அர்ஜுன்தான்.

இந்தியிலும் அல்லு அர்ஜுன் அசத்த வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்