தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியில் மறுபதிப்பு ஆகிறது ‘பெருசு’

1 mins read
99865313-e61d-46df-a9d8-e118631f47ad
‘பெருசு’ படத்தில் நடித்த நடிகர்கள். - படம்: ஊடகம்

தமிழில் வெளியான ‘பெருசு’ படம் இந்தியில் மறுபதிப்பு செய்யப்பட இருக்கிறது.

அண்மையில் வெளியான படம் ‘பெருசு’. இந்தப் படத்தில் வைபவ், நிஹாரிகா, சுனில், கருணாகரன் முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட் ஸ்டூடியோஸ் மற்றும் சசி நாகா ஆகியோர் தயாரித்துள்ள இந்தப் படத்தை இளங்கோ ராம் இயக்கி இருந்தார்.

18 வயதிற்கு மேலானவர்கள் பார்க்கும் நகைச்சுவைப் படமான இந்தப் படத்திற்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இந்தப் படம் இந்தியில் மறுபதிப்பு செய்யப்பட இருக்கிறது. இந்தியில் யார் இயக்கவுள்ளார் என்பது உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

சிறு முதலீட்டில் எடுக்கப்பட்ட ‘பெருசு’ திரைப்படத்தின் ஓடிடி உரிமை படம் வெளியாவதற்கு முன்பே நல்ல தொகைக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரைப்படம்