நடிகரும் பாடகருமான ‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதி, திரையுலகில் அறிமுகமாகி பத்தாண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
இதை நினைவுகூரும் வகையில், ‘ஆம்பள’ படத்தில் தன்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய இயக்குநர் சுந்தர்.சி, அப்படத்தின் நாயகன் விஷால் ஆகிய இருவருடன் தாம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், தமது பதிவில், “இது பத்து வருடங்களுக்கு முன்பு நடந்தது. # ஆம்பள திரைப்படம்,” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான ஆதி, தற்போது கதாநாயகன், இயக்குநர், பாடகர் எனப் பன்முகம் காட்டி வருகிறார்.
“சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் நானும் இணைந்தது என் வாழ்க்கையில் முக்கியமான தருணம்,” என்கிறார் ஆதி.

